தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-3-pm
top-10-news-3-pm

By

Published : Jul 14, 2020, 2:56 PM IST

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: சச்சின் பைலட் நீக்கம்!

ஜெய்ப்பூர்: சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அவர் துணை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

'பாசிச கட்டுப்பாட்டில் இந்திய ஊடகங்கள்' - ராகுல் காந்தி தாக்கு!

டெல்லி: பெரும்பாலான இந்தியா ஊடகங்கள் பாசிசவாத நலன் விரும்பிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஒரே நாளில் 75 பாஜக தலைவர்களுக்கு கரோனா

பாட்னா: பிகார் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 75 பாஜக நிர்வாகிகளுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

'இயல்புநிலை திரும்ப வாய்பே இல்லை... நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது' - WHO

லண்டன்: தற்போதைய சூழ்நிலையில் இயல்புநிலை திரும்புவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

வங்கி, ரேஷன் கடை, தொழிற்சாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வங்கி, ரேஷன் கடை, தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த சுற்றிக்கையை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.

18 கோடி ரூபாய் வசூல்செய்த காவல் துறை: ஊர் சுத்த போகாதீங்க மக்களே!

சென்னை: தமிழ்நாட்டில் பொதுமுடக்கத்தை மீறி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளிடம் பெறப்பட்ட அபராதத் தொகை 18 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

ராணுவ வீரரின் மனைவி, தாய் கொலை; நகைகள் கொள்ளை!

சிவகங்கை: வீட்டில் தனியாக இருந்த ராணுவ வீரரின் மனைவி, தாய் ஆகியோரைக் கொலைசெய்த அடையாளம் தெரியாத நபர்கள், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா நிவாரண வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியது தொடர்பாக, தமிழ்நாடு அரசு விரிவாக பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

’பிக் பி’ ஊழியர்களுக்கு கரோனா தொற்று இல்லை

மும்பை: நடிகர் அமிதாப் பச்சனுக்கு சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் பணிபுரியும் 26 ஊழியர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய சேனல்களுக்கான தடையை விலக்கிக்கொண்ட நேபாளம்!

காத்மண்டு: ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த சில செய்திச் சேனல்களைத் தவிர மற்ற இந்திய சேனல்களுக்கு நேபாள அரசு விதித்திருந்த தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details