தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top 10 news 11am
top 10 news 11am

By

Published : Jun 28, 2020, 11:04 AM IST

'சென்னையிலிருந்து 1,31,785 பிற மாநிலத் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்'

சென்னை : சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரையிலும் 1,31,785 பிற மாநிலத் தொழிலாளர்களை பாதுகாப்பாக அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி உள்ளது என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஒரு கோடியைத் தாண்டிய கரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

மீண்டும் ஒரு சாத்தான்குள சம்பவம்! போலீஸாரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மரணம்!

தென்காசி: வீரகேரளம்புதூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாத்தான்குளத்தில் புதிய காவல் ஆய்வாளர் நியமனம்

தூத்துக்குடி : சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில், புதிய காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரோனா தாக்கம் : இறப்பவர்களின் எண்ணிக்கையைத் தடுப்பதே முதல் நோக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையைத் தடுப்பதே, எங்களின் முதல் நோக்கம் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காவலாளிக்கு கரோனா பாதிப்பு : பெரியார் - அண்ணா நினைவகம் மூடல்!

ஈரோடு : ஈரோட்டில் உள்ள பெரியார் அண்ணா நினைவகத்தில் பணியாற்றிவந்த காவலாளிக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவிட்-19 சிகிச்சைக்கு டெக்ஸாமெதாசோன் மருந்தை சேர்த்தது மத்திய சுகாதாரத் துறை!

கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ஸ்டீராய்டு மருந்தான டெக்ஸாமெதாசோன் (Dexamethasone) மருந்தையும் சில கட்டுப்பாடுகளுடன், மருத்துவர்கள் பயன்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

இந்தியாவின் தவப்புதல்வனுக்குப் புகழஞ்சலி - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் நரசிம்ம ராவ் பிறந்தநாளான இன்று (ஜூன் 28), இந்தியாவின் தவப்புதல்வனுக்குப் புகழஞ்சலி என்ற தலைப்பில் அவர் குறித்து தனது நினைவலைகளை மன்மோகன் சிங் பகிர்ந்துள்ளார்.

'அதிகார அத்துமீறல்‌ முடிவுக்கு வர வேண்டும்’ - நடிகர் சூர்யா அறிக்கை

சென்னை : சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குற்றம் 04 - பெருநிறுவனங்களின் ஊழியர்களை குறிவைக்கும் இ-மெயில் ஃபார்வேர்டர்

ஜெய்ப்பூர்: சமீப காலங்களாகவே பெரு நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்படும் இ-மெயில் ஃபார்வேர்டர் எனப்படும் சைபர் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details