தமிழ்நாடு

tamil nadu

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Jun 26, 2020, 11:10 AM IST

Published : Jun 26, 2020, 11:10 AM IST

top 10 news 11am
top 10 news 11am

நாட்டில் ஒரேநாளில் கரோனா உச்சம்: 17,296 புதிய பாதிப்பு, 407 பேர் மரணம்!

டெல்லி: நாட்டில் ஒரேநாளில் புதிதாக கரோனா பாதிப்பு 17 ஆயிரத்து 296 ஆகப் பதிவாகியுள்ளது. 407 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரிலிருந்து 1.63 லட்சம் பேர் வெளியேற்றம்!

ஜம்மு: கரோனா பொதுமுடக்கம் (லாக்டவுன்) காரணமாக, ஜம்மு காஷ்மீரில் சிக்கித் தவித்த 1.63 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கான்பூர் சிறுமிகளுக்கு உரிய சிகிச்சை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

டெல்லி: கான்பூர் அரசு விடுதியில் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூரில் ஜனநாயகப் படுகொலை- அஜய் மக்கான்

டெல்லி: மணிப்பூரில் பாஜக ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தியது எனக் காங்கிரஸ் மூத்தத் தலைவர் அஜய் மக்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

#Say_No_To_Drug: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் காணொலி வெளியீடு!

சென்னை: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (ஜூன் 26) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி திரை பிரபலங்கள் #Say_No_To_Drug என்ற காணொலியை வெளியிட்டுள்ளனர்.

எஃப்.எம். ரேடியோ வெடித்து விவசாயி இறந்த வழக்கு: அண்ணனே கொலைசெய்தது அம்பலம்!

சேலம்: எஃப்.எம். ரேடியோ பெட்டி வெடித்து விவசாயி உயிரிழந்த வழக்கில் நிலத் தகராறு காரணமாக அண்ணனே வெடிவைத்து கொலைசெய்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் மருந்தகங்கள் 11 மணிக்கு மேல் வழக்கம்போல் செயல்படும்

சென்னை: சென்னையில் மருந்தகங்கள் 11 மணிக்கு மேல் வழக்கம்போல் செயல்படும் என்று மருந்தக வணிகர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு மின்கட்டணம் ஒரு லட்சம் ரூபாயா? - கலங்கிப்போன கார்த்திகா

ஊடரங்கு நேரத்தில் தனக்கு ஒரு லட்ச ரூபாய்வரை மின் கட்டண ரசீது வந்துள்ளதாக 'கோ' பட நாயகி அவரது ட்விட்டர் வாயிலாக புகார் ஒன்றை எழுப்பியுள்ளார்.

தனியார்மயமாதல்: விண்வெளித் துறையில் இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்: இஸ்ரோ

பெங்களூரு: இன் - ஸ்பேஸ்' எனப்படும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இவ்வேளையில் இஸ்ரோவின் தலைவர் சிவன், அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

'ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி' - பாகிஸ்தான் பிரதமர் பேச்சால் சர்ச்சை!

கராச்சி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி எனப் புகழாரம் சூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details