தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news 11 AM - Top 10 news

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கத்தைக் காணலாம்.

top-10-news-11-am
top-10-news-11-am

By

Published : Oct 13, 2021, 11:29 AM IST

1. கோயில்கள், பள்ளிகள் திறப்பு: முதலமைச்சரின் முடிவு என்ன?

விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை நாள்களில் கோயில்களைத் திறப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் அளிப்பது - பள்ளிகள் திறப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 13) அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

2. 90 வயதில் ஊராட்சித் தலைவரானார் மூதாட்டி: எதிர்த்துப் போட்டியிட்ட இருவரும் டெபாசிட் இழப்பு!

திருநெல்வேலியில் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 90 வயதான மூதாட்டி வெற்றிபெற்றதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் மூதாட்டியைத் தோளில் சுமந்து ஊஞ்சலாட்டி தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

3. உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 51 பேர் வெற்றி

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றிபெற்றதாக மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

4. கலவரம் வெடிக்க வாய்ப்பு - எச்சரிக்கும் காங்கிரஸ்!

சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யாவிட்டால் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ. பிரிவு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

5. மணவாளநல்லூர் ஊராட்சித் தேர்தல்: திமுக ஆதரவு வேட்பாளர் தோல்வி

நன்னிலம் அருகேவுள்ள மணவாளநல்லூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரபாகரனிடம் திமுக ஆதரவுபெற்ற வேட்பாளர் முகமது ஜர்ஜித் 270 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

6. 'திமுக வெற்றி ஸ்டாலினின் நல்லாட்சிக்கு கிடைத்த சான்று'

கோவையில் திமுகவின் வெற்றி என்பது ஸ்டாலினின் நல்லாட்சிக்கு கிடைத்த சான்று என்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

7. எல்லா சின்னத்திலேயும் ஒரு குத்து - வாக்காளனின் அதீத ஜனநாயகக் கடமை!

விழுப்புரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாக்குச்சீட்டிலுள்ள அனைத்துச் சின்னங்களிலும் வாக்களித்து தனது அதீத ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கும் ருசிகர சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

8. மகாராஷ்டிராவில் இரட்டை ரயில் பாதை பணிகள்: மதுரை வழியாகச் செல்லும் ரயில்களில் மாற்றம்

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் மதுரை, அதன் வழியாக மும்பை செல்லும் ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

9. நடிப்பில் ஆல்ரவுண்டர் ஸ்ரீகாந்த் - ரஜினி, கமல் இரங்கல்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

10.'பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details