தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 11 AM - 11 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்

top
top

By

Published : Aug 14, 2021, 11:07 AM IST

1.தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021 - செய்திகள் உடனுக்குடன்...

பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரிய துணை மண்டலம் அமைக்கப்படும்

2.தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறை... இன்று தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்!

கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

3.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

4.ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரே மாவட்டத்தில் 49 குழந்தைகள் பலி!

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மெல்காட் பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

5.காக்கங்கரை அருகே தலை துண்டித்த நிலையில் இளைஞர் உடல்

திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் இளைஞர் சடலமாகக் கிடந்தார். இது குறித்து ரயில்வே காவல் துறையினர் கொலையா, தற்கொலையா என விசாரித்துவருகின்றனர்.

6.ஆந்திராவிலிருந்து 100 கிலோ கஞ்சா கடத்திவந்த இருவர் கைது

ஆந்திர மாநிலத்திலிருந்து சேலம் வழியாக 100 கிலோ கஞ்சா கடத்திவந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

7.மதுரை ஆதீனத்தின் உடலுக்கு ஆதீன மடாதிபதிகள் நேரில் அஞ்சலி

உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடலுக்கு பல்வேறு ஆதீனங்களின் மடாதிபதிகளும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

8.கொடநாடு வழக்கில் புதிய திருப்பம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய திருப்பமாக மூன்று முக்கிய மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

9.சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் நாளை(ஆக.15) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருக்கும் விழாவ முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

10.29 years of சூரியன் - 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'

நடிகர் சரத்குமாரின் திரைப்பயணத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த சூரியன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஆக. 14) 29 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ABOUT THE AUTHOR

...view details