தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS 11 AM - 11 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-11-am
top-10-news-11-am

By

Published : Aug 1, 2021, 11:12 AM IST

1.போக்குவரத்து கழக பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக - கமல்ஹாசன்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

2.தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

3.விமானப் படை தலைமை தளபதி பதவுரியா ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம்

நல்லெண்ண அடிப்படையில் விமானப் படை தலைமை தளபதி பதவுரியா ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

4.நண்பர்கள் தின ஸ்பெஷல்: எனக்கு நீ மட்டும்தான்டா இருக்க!

1958ஆம் ஆண்டு பராகுவேயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது சர்வதேச நண்பர்கள் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

5.பெண்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ள இலவச பேருந்து பயணம் - கனிமொழி

முதலமைச்சர் அறிவித்த பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து பயணம், அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

6.புதிய அட்டைதாரர்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பா?

புதிய அட்டைதாரர்கள் எப்போது நியாய விலைக்கடைகளில் பொருள்கள் வாங்கலாம் என்பது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

7.’எதிர்க்கட்சிகள் அமளியால் மழைக்கால கூட்டத்தொடரில் 133 கோடி ரூபாய் இழப்பு’ - ஒன்றிய அரசு

107 மணி நேரம் செயல்பட வேண்டிய நாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18 மணிநேரம் மட்டுமே செயல்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் 133 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

8.ஹால்டிபாரி-சிலாஹாட் ரயில் பாதையில் சரக்கு ரயில் சேவை தொடக்கம்!

இந்தியா - வங்கதேசம் இடையே அமைக்கப்பட்ட ஹால்டிபாரி - சிலாஹாட் ரயில் பாதையில் இன்று (ஆக.1) முதல் சரக்கு ரயில் சேவை தொடங்கவுள்ளது.

9.டோக்கியோ ஒலிம்பிக்: காலிறுதியில் வெளியேறினார் சதீஷ்

குத்துச்சண்டையில் ஆடவருக்கான 91 கிலோ பிரிவில் விளையாடிய இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிச்சுற்றில் பகோதிர் ஜலோலோவுடன் மோதி தோற்று வெளியேறினார்.

10.வைரலாகும் ஷ்ரதா கபூரின் வாட்ஸ் அப் மெசேஜ்

நடிகை ஷ்ரதா கபூரின் வாட்ஸ் அப் மெசேஜை அடையாளம் தெரியாத நபர் சிலர் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details