தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 11 AM - காலை 11 செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 செய்திச் சுருக்கம்...

காலை 11 செய்திச் சுருக்கம்
காலை 11 செய்திச் சுருக்கம்

By

Published : May 29, 2021, 11:13 AM IST

1. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணிகளில் உள்ளவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2. ஜிஎஸ்டி பகிர்வில் வளர்ந்த மாநிலங்களுக்கு அநீதி: பிடிஆர் அதிரடி பேச்சு

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி பகிர்வில் மாநில மொத்த உற்பத்தியை (GSDP) கருத்தில் கொள்ளாமல் வளர்ந்த மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் குற்றம்சாட்டியுள்ளார்.

3. மக்களை ராகுல்காந்தி குழப்புகிறார் - அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் சாடல்!

கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து மக்களை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி உழைத்து வரும் வேளையில், அவரை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மோசமாக விமர்சிப்பது, அரசைக் குறைகூறும் ஆவணத்தின் (டூல்கிட்) பின்னணியில் காங்கிரஸ் இருப்பதைக் காட்டுகிறது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

4. மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.41.40 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் ஸ்டாலின்

மருத்துவ உபகரணங்களை வாங்க மேலும் 41.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

5. மீண்டும் பழைய முறையிலேயே மறுதேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: முந்தைய எழுத்துத் தேர்வுகளைப் போலவே ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ள மறுதேர்வு வினாத்தாள் அமைப்பும் இருக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

6. நீடிக்கும் அரசியல் குழப்பம்: கே.பி சர்மா ஒலி நம்பிக்கைக்குக் காரணம் என்ன?

நேபாளத்தில் கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற கலைக்கப்பட்டுள்ளது.

7. அரசு வழக்குகளில் ஆஜராக மேலும் ஆறு வழக்கறிஞர்கள் நியமனம்!

சென்னை: அரசு வழக்குகளில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜராக மேலும் ஆறு வழக்கறிஞர்களை நியமித்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

8. 'மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை' - ஜிஎஸ்டி அரங்கை அதிரவைத்த பழனிவேல் தியாகராஜன்

டெல்லி: 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி அமைப்பின் கட்டமைப்பு குறைபாடுகளை தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எடுத்துரைத்தார்.

9. அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் காலமானார்!

கணினியிலும், இணையத்திலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதில் முயற்சி மேற்கொண்டு வெற்றி கண்ட, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 92.

10. GOOGLE PHOTOS ஜூன் 1 முதல் இவர்களுக்கு ஜிமெயில் சேவைகள் கிடையாது: கூகுள் அதிரடி

ஜிமெயில் மூலம் ட்ரைவ், ஷீட்ஸ், ஃபோட்டோஸ், டாக்ஸ், யூடியூப் போன்ற பல சேவைகளை அளித்து வரும் கூகுள் நிறுவனம்

ABOUT THE AUTHOR

...view details