தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 செய்திச் சுருக்கம்-Top 10 News 11 AM - காலை 11 செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 செய்திச் சுருக்கம்...

Top 10 News 11 AM
Top 10 News 11 AM

By

Published : May 27, 2021, 11:29 AM IST

1. தொடரும் பாலியல் தொல்லை: பிரபல பயிற்சியாளர் மீது வீராங்கனை புகார்!

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை விவகாரத்தைத் தொடர்ந்து, 'தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் வீராங்கனை ஒருவர், தனது பயிற்சியாளர் மீது தமிழ்நாடு மாநில தடகள சம்மேளனத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.

2. குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து 500 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஈரோடு: குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி உபரி நீர் நீரோடை வெளியேறுவதால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

3. 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தந்தை கைது!

திருப்பத்தூர்: தனது 4ஆவது மனைவியின், 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

4. பச்சிளம் குழந்தைகள் இருந்த அறையில் திடீர் தீ விபத்து!

சேப்பாக்கம் கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவப் பிரிவில் ஏற்பட்ட மின் கசிவால், திடீரென தீ பற்றிக் கொண்டது.

5. கரையைக் கடந்த யாஸ் புயல்: பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியக் கடலோரக் காவல்படை!

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் கரையைக் கடந்த நிலையில், புயலுக்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியக் கடலோர காவல்படை மேற்கொண்டுள்ளது.

6. போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த பெயிண்டர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த பெயிண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

7. மின் கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்

சென்னை: மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

8. 'லட்சத்தீவுகளுக்கான நிர்வாகியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' – சீமான்

இந்திய ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான லட்சத்தீவுகளுக்கான நிர்வாகியாக மத்திய அரசால் பணியமர்த்தப்பட்டுள்ள பிரபுல் பட்டேல்

9. கரோனா உதவி,களத்தில் நிதி அகர்வால்: மக்களுக்கு உதவ தொண்டு நிறுவனம் தொடக்கம்!

நடிகை நிதி அகர்வால், கரோனா தொற்றுத் தொடர்பான நலதிட்ட உதவிகளைச் செய்ய புதிய தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

10. கிராம்பு விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

நீலகிரி: குன்னூர் பர்லியார் பகுதியில் கிராம்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details