தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 11 AM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS 11 AM
TOP 10 NEWS 11 AM

By

Published : May 24, 2021, 11:14 AM IST

சாலையோரம் கிடந்த அடையாளம் தெரியாத சடலம்: காவல்துறை விசாரணை!

காட்பாடி-சித்தூர் செல்லும் சாலையோரப் பகுதியில் கிடந்த 50 வயதுடையவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர், அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

'எந்தக் கட்சியாக இருந்தாலும் சேவை செய்வதுதான் என் கடமை' அதிமுக முன்னாள் அமைச்சர்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல், திமுக, அதிமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும், சேவை செய்வதுதான் தனது கடமை என்று தெரிவித்துள்ளார்.

மூன்று லட்சத்தைத் தாண்டிய கரோனா உயிரிழப்பு!

நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்று லட்சத்து 3 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல்!

காஞ்சிபுரம்: ஊரடங்கு விதிகளை மீறி சாலையில் சுற்றியவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

முன்பதிவு மையங்கள் குறைப்பு - தெற்கு ரயில்வே!

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக 13 முன்பதிவு மையங்கள் வரும் மே 30ஆம் தேதி வரை செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெரம்பலூரில் சார் ஆட்சியர் உள்ளிட்ட 475 பேருக்கு கரோனா தொற்று!

பெரம்பலூர்: நேற்று (மே. 23) வருவாய் கோட்ட சார் ஆட்சியர் உள்ளிட்ட 475 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூட்டி கண்ணாடியைப் பார்த்து அதிர்ச்சியில் வாகனத்தை நிறுத்திய இளம்பெண்... நடந்தது என்ன?

திருச்சி: இளம்பெண் ஒருவர் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் கண்ணாடியில் பாம்பு நெளிந்ததைக் கண்டு அச்சமடைந்த அந்தப்பெண், சாலையில் திடீரென வாகனத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்தோஷமாக இருங்க நடனமாடி நம்பிக்கையூட்டிய அமைச்சர் மகள்!

பெங்களூரு: பெங்களூரு சப்தகிரி தனியார் மருத்துவமனையில், கர்நாடக கல்வித்துறை அமைச்சரின் மகள் திஷா குமார் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். மருத்துவர் திஷா குமார், மன அழுத்தத்தில் இருக்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்காக நடனமாடி உற்சாகப்படுத்திவருகிறார்.

இத்தாலியில் 985 அடி உயரத்தில் இருந்து அறுந்து விழுந்த கேபிள் கார் - 14 பேர் உயிரிழப்பு!

ரோம்: இத்தாலியின் வடக்கே மலைப் பகுதிக்குச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

அதிவேகமாக சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகும் லாரி!

மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் பகுதியிலுள்ள சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சரக்கு லாரி, சாலை வளைவிலுள்ள தடுப்பில் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

ABOUT THE AUTHOR

...view details