தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 11 AM - TOP 10 NEWS 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 செய்திச் சுருக்கம்...

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 11 AM
காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 11 AM

By

Published : May 20, 2021, 11:27 AM IST

1. திருமணம் சுபநிகழ்வுகளுக்கு ஒரே இ-பதிவு முறை அறிமுகம்!

திருமணம் மற்றும் சுபநிகழ்வுகளுக்குச் செல்ல ஒரே இ-பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2. 'எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற முடிவுகள் வேண்டாம்' - டி.டி.வி. தினகரன் ட்வீட்

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதவி ரத்து குறித்து 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என அரசு முடிவு எடுத்திருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

3. நீலகிரியில் பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

நீலகிரி: பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4. முக்கோணக் காதலால் விபரீதம்: இளைஞர் குத்திக் கொலை!

கன்னியாகுமரி: ஒரே பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். தப்பியோடிய இருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

5. 'குரோம்பேட்டை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்படும்' எம்.பி டி.ஆர்.பாலு!

சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என, ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

6. பள்ளிக்கல்வி ஆணையர் விவகாரம்: முதலமைச்சரிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்!

பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

7. ஊரடங்கில் வெளியே சுற்றிய கலெக்டரை கேள்வி கேட்ட பெண் போலீஸ்.!

ராஜஸ்தான் : பில்வாரா மாவட்டத்தில், கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் சிவ்பிரசாத் எம்.

8. கோயில் தகவல்களை அறிந்துகொள்ள இணையதள வசதி!

புதுச்சேரி: இந்து சமய அறநிலை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் தகவல்களை அறிந்து கொள்வதற்கான இணையதள வசதியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தொடங்கி வைத்தார்.

9. #HBD சூப்பர் சிங்கர் புகழ் - மா கா பா ஆனந்த்

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் மா கா பா ஆனந்த் இன்று(மே20) தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

10. தொழிற்நிறுவனங்கள் கலந்தாய்வுக் கூட்டம்' மு.க.ஸ்டாலின் உரை!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முன்னணி தொழில் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் உடனான கலந்தாய்வு

ABOUT THE AUTHOR

...view details