தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 செய்திச் சுருக்கம்...

காலை 11 மணி செய்திச் சுருக்கம்-TOP 10 NEWS 9 AM
காலை 11 மணி செய்திச் சுருக்கம்-TOP 10 NEWS 9 AM

By

Published : May 19, 2021, 11:14 AM IST

1. சுந்தரவனக் காடுகளை தாக்கும் 'யாஷ் புயல்'?

அம்பன் புயலை அடுத்து மேற்கு வங்கம் மாநிலத்தை 'யாஷ்' என்ற புதிய புயல் தாக்க வாய்ப்பிருப்பதாக மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2. விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - தேமுதிக தலைமைக் கழகம்

தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக, தேமுதிக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

3. அரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவர்கள் உயிரிழப்பு!

தர்மபுரி: அரூர் அருகே வாணியாற்று பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

4. புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்: அலுவலர் பணியிடை நீக்கம்!

திண்டுக்கல்: குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டை வழங்க லஞ்சம் பெற்ற அலுவலரை, பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

5. 'திட்டமிட்டு அலுவலர்களை வரவழைத்து நடைபெற்ற கூட்டம் அல்ல' அமைச்சர் விளக்கம்!

திருச்சி: திமுக அலுவலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர், காவல் ஆணையர் கலந்து கொண்டதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

6. தனது சேமிப்பு பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கிய 9 வயது சிறுவன்!

சேலம்: 'டேப்' வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
7. வெப்ப சலனத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வெப்பச் சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8. புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகர் நியமனம் இழுபறி நீடிப்பு!

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே நிகழ்ந்து வரும் பனிப்போரால் தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்களை கடந்தும் தற்காலிக சபாநாயகரை நியமிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

9. உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்!

சென்னை: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்னும் துறை உருவாக்கப்பட்ட 10 நாட்களுக்குள் குறைதீர்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டு மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

10. சிஐஐ சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள்: சுகாதாரத்துறையிடம் ஆளுநர் வழங்கினார்!

புதுச்சேரி: இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு சார்பில் 1 லட்சம் முககவசங்கள், ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் கருவி ஆகியவை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details