தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-11-am
top-10-news-11-am

By

Published : Jul 5, 2020, 11:00 AM IST

ஒடிசா காந்தமால் என்கவுண்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஒடிசா மாநிலம் காந்தமால் என்கவுண்டரில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்

வருமானவரிக் கணக்கு தாக்கல்: காலக்கெடு மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு

டெல்லி: 2019-20 ஆண்டிற்கான வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குக் குழி கண்டுபிடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்குக் குழி கண்டுபிடிக்கப்பட்டு, அங்கிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நான் தான் பிரதமர் அலுவலக பாதுகாப்பு ஆலோசகர், ரூம் குடுங்க!

பெங்களூரு : பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிவதாகக்கூறி ஏமாற்றி, இளைஞர் ஒருவர் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தடை!

தூத்துக்குடி, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பணியில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து நலம் பெற்ற பொன்.மாணிக்கவேல்!

தஞ்சை: ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து, ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர் ஐஜி பொன்.மாணிக்கவேல் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏடிஎம்மில் எரிந்து நாசமான ரூ. 6 லட்சம் பணம்

நாமக்கல்: பாச்சல் தனியார் பொறியியல் கல்லூரியிலிருந்த ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் எரிந்து நாசமாகின.

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அஜய் தேவ்கனின் 'மைதான்' படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றம்

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள 'மைதான்' படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

ஆகஸ்ட்டில் தொடங்கும் குத்துச்சண்டை பயிற்சி முகாம்!

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த குத்துச்சண்டை பயிற்சிகளை வருகிற ஆகஸ்ட் மாதத்திலிருந்து மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details