தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm - ஒரு மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்.

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்

By

Published : Aug 30, 2021, 1:32 PM IST

1. உத்தரகாண்ட் நிலச்சரிவு: புதையுண்ட 5 பேர், இருவர் பலி!

உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டத்தில் இன்று (ஆக.30) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில், மீட்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

2. 'கடந்த தேர்தலில் திமுகவினருக்கு உதவிசெய்ய தவறியவர் ஜோதிமணி'

கடந்த தேர்தலில் நமது இயக்கத் தோழர்களுக்கு உதவிசெய்ய தவறியவர் எம்பி ஜோதிமணி என்று தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

3. 'இந்தியா உடனான அரசியல், வர்த்தகம் மிக முக்கியமானது' - ஆப்கன் தலைமை

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான அரசியல், வா்த்தக உறவுகளை கடந்த காலத்தைப் போலவே தொடா்ந்து பேண விரும்புவதாக தலிபான் இயக்கத்தின் மூத்த தலைவா் ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளாா்.

4. இந்தியாவில் மேலும் 42,909 பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 380 நபர்கள் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

5.இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த வீரர்கள்: பிரதமர் மோடி வாழ்த்து

பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று (ஆகஸ்ட் 30) வெற்றிபெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கும் நான்கு வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

6.சிம்பு’னா சும்மாவா.... 300 நாள்களில் 3 மில்லியன் ஃபாலோயர்கள்!

நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய 300 நாள்களில் மூன்று மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

7.சிவகார்த்திகேயனை இயக்குகிறார் கௌதம் மேனன்?

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

8. பதக்கத்தை குவிக்கும் இந்தியா; ஈட்டி எறிதலில் இரட்டைப் பதக்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை ஏழாக உயர்த்தியுள்ளனர்.

9.வரலாற்றுச் சாதனை: தங்கம் வென்ற முதல் பெண் அவனி லெகாரா

பாரா ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

10. PARALYMPICS: வெள்ளி வென்றார் யோகேஷ் கத்துனியா; இந்தியாவுக்கு 5ஆவது பதக்கம்

பாரா ஒலிம்பிக் வட்டு எறிதல் எஃப்-56 பிரிவில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப் பதக்கம் வென்று, டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான ஐந்தாவது பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details