தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS 1 PM - 1 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

TOP 10 NEWS 1 PM
TOP 10 NEWS 1 PM

By

Published : Aug 29, 2021, 1:12 PM IST

1. அதிகரிக்கும் கரோனா பாதிப்பு- கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அமல்

கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

2. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விவரங்களை கீழே 'கிளிக்' செய்து காணலாம்.

3. இந்தியாவில் மேலும் 45,083 பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 460 நபர்கள் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

4. 'அவசர அவசரமாக பள்ளிகளைத் திறக்க வேண்டாம்' - எய்ம்ஸ் பேராசிரியர்

கரோனா முழுமையாக குறையாத சூழ்நிலையில், பள்ளிகளைத் திறப்பதில் அரசு நிதானம் காட்ட வேண்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் நவீத் விக் கேட்டுக்கொண்டுள்ளார்

5. மணமகன் வாயில் குட்கா - பளார் விட்ட மணமகள்

திருமண சடங்கின் போது,குட்காவை மென்ற மணமகனை, மணமகள் கன்னத்தில் அறைந்தது சமூக வலைத்தளத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

6. காபூல் விமானநிலையத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெறலாம் - ஜோ பைடன்

காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 மணி முதல் 36 மணி நேரத்திற்குள் பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

7. நீதிமன்ற வளாகம் முன் கத்தி குத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்

கொலைவழக்கு சம்பந்தமாக கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8.விஷாலின் பிறந்தநாள் ட்ரீட்

நடிகர் விஷால் நடித்துவரும் 31ஆவது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

9.SILVER FOR INDIA: பாலிவுட்டின் பாராட்டு மழையில் பவினாபென்!

பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை பவினாபென் படேலுக்கு, திரைப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

10.பாரா ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் பவினாபென் படேல்

பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details