தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1Pm - ஸ்விஸ் வீராங்கனை பென்சி

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

TOP 10 NEWS 1 PM
TOP 10 NEWS 1 PM

By

Published : Aug 1, 2021, 1:09 PM IST

கோவிட்-19: குணமடைந்தவர்களை தாண்டி, 41,831 பேர் தொற்றால் பாதிப்பு

கரோனா மூன்றாம் அலை வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக, நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கரோனா சான்று கட்டாயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல். கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் கண்டிப்பாக கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை வகிக்க உள்ள நிலையில், கடல்சார் பாதுகாப்பு, அமைதி காத்தல் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது.

மரக்கட்டையை பற்றியபடி மிதந்த பெண்: 16 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்பு!

யமுனா நதியில் விழுந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 16 மணி நேரம் மிதந்தபடியே இருந்து மீண்டு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் ஸ்விஸ் வீராங்கனை பென்சிக்!

ஸ்விட்சர்லாந்த்தைச் சேர்ந்த பெலின்டா பென்சிக் ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தன் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அதிகரிக்கும் கரோனா...கோவையில் கூடுதல் கட்டுபாடுகள்!

கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கோவையில் ஆகஸ்டு இரண்டாம் தேதி முதல் கூடுதல் கட்டுபாடுகள் விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய தடை!

ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு இன்று(ஆக்.1) முதல் மூன்று நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை சீண்டிய செல்ஃபி பிரியருக்கு ஷாக்!

திருச்சி அருகே செல்ஃபி எடுக்கும்போது இருவரை சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளனர்.

புதிய திரைப்படக் கொள்கை தொடர்பாக காஷ்மீர் துணை நிலை ஆளுநரை சந்தித்த ஆமிர் கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கான் ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை நேரில் சந்தித்து அம்மாநில புதிய திரைப்படக் கொள்கையை குறித்து ஆலோசித்தார்.

பஞ்சாயத்த கூட்டிருவோம்... அறியா சிறுமி உயிரைக் குடித்த நால்வரின் மிரட்டல்

15 வயது சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details