தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - சென்னையில் முகாம்கள் ரத்து

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

TOP 10 NEWS
TOP 10 NEWS

By

Published : Jun 28, 2021, 12:57 PM IST

கல்லூரி மாணவர் சேர்க்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

'டேக்' செய்த ஜெர்மன் வாழ் தமிழ் பெண்.. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்..

சமூகவலைத்தளம் மூலம் கோரிக்கை விடுத்த ஜெர்மன் வாழ் தமிழ் பெண்ணுக்கு அமைச்சர் கே.எஸ். மஸ்தான் உடனடியாக உதவி செய்துள்ளார்.

தடுப்பூசி கையிருப்பில் இல்லை - சென்னையில் முகாம்கள் ரத்து!

கரோனா தடுப்பூசி இல்லாத காரணத்தினால், சென்னையில் இன்று (ஜூன் 28) கரோனா தடுப்பூசி முகாம்கள் ரத்து என மாநகராட்சி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மேலும் 46 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 578 பேர் குணமடைந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

‘தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை’ - மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா டெஸ்ட்... விவசாயி குடும்பத்திற்கு கல்லூரி மாணவர் மூலம் ஸ்கெட்ச்: இருவர் கைது

கொடுத்தக் கடனை திருப்பிக் கேட்ட விவசாயி குடும்பத்திற்கு, கல்லூரி மாணவர் மூலம் விஷ மாத்திரை கொடுத்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர். வேலை வாங்கித் தருவதாக மாணவருக்கு ஆசைகாட்டி மாத்திரை கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஏடிஎம் கொள்ளை: ஹரியானாவில் 3ஆவது கொள்ளையன் கைது

வங்கி ஏடிஎம் கொள்ளை தொடர்பாக மூன்றாவது கொள்ளையனை ஹரியானாவில் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கமலுடன் ஜோடி சேரும் நதியா?

பாபநாசம் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை நதியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவுடன் திருமணம் ஏன் தாமதம்? - ரகசியம் உடைத்த விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள ஏன் இவ்வளவு தாமதமாகிறது என்பது குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னையில் பரவலாக மழை

சென்னை, அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.

ABOUT THE AUTHOR

...view details