தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-1-pm
top-10-news-1-pm

By

Published : Jul 5, 2020, 12:59 PM IST

'அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு முன் துரித நடவடிக்கை தேவை'

டெல்லி: நீண்ட காலமாக அருணாச்சலப் பிரதேசத்தின் மீது கண் வைத்திருக்கும் சீனா, லடாக் பகுதிகளைத் தொடர்ந்து அங்கும் விதிகளை மீறி ஏதேனும் செய்வதற்கு முன்னதாக விரைவான மற்றும் வலுவான போர்த் திட்டத்தை இந்தியா தயாரிப்பது நல்லது என மூத்தப் பத்திரிகையாளர் சஞ்சிப் கே.ஆர் தெரிவித்துள்ளார்.

இந்தியா நேபாளத்தை இழக்கிறதா?; அந்த வாய்ப்பை சீனா பயன்படுத்திக் கொள்கிறாதா?

இந்தியா-நேபாளம் பூசல் குறித்து ஜே.என்.யூ. முன்னாள் பேராசிரியரும், இந்தியா வெளியுறவுத் துறையின் முன்னாள் தூதருமான எஸ்.டி. முனி எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்...

சென்னையில் 66 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!

சென்னை: சென்னையில் இதுவரை 66 ஆயிரத்து 538 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை' - ஐஜி சங்கர் எச்சரிக்கை

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கு விசாரணை தொடர்பாக உள்நோக்கத்துடன் தவறான செய்தி பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ அம்மன் கே. அர்ஜுனனுக்குக் கரோனா!

கோவை தெற்கு தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே. அர்ஜுனனுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மார்ச்சில் மட்டும் இவ்வளவு கோடியா?... கோடிகளில் புரளும் பப்ஜி நிறுவனம்

கரோனா காலங்களில் சிறுவர்களும் இளைஞர்களும் வீட்டிலேயே இருப்பதால் பப்ஜி விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, மார்ச் மாதத்தில் மட்டும் பப்ஜி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

'என் ஆபிஸுக்கு டிசைன் பண்ணித் தர முடியுமா?' - மனைவியிடம் இன்ஸ்டாவில் ஷாருக் கேள்வி

மும்பை: ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தைப் புதுப்பித்துத் தருமாறு தனது மனைவி கௌரி கானுக்கு ஷாருக் கான் சமூக வலைதளம் வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரோனாவால் உயிரிழந்த மருத்துவருக்கு உதவிய முதலமைச்சர் - நன்றி தெரிவித்த அரசு மருத்துவர்கள் சங்கம்!

சென்னை : கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு நிதி உதவி, அரசு வேலை உள்ளிட்டவற்றை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... இணையம் இல்லாமல் திரைப்படங்களைக் காணலாம்!

அமேசான் நிறுவனத்தின் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தின் புதிய மென்பொருளை மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டோரில் அறிமுகப்படுத்தியுள்ளது. கைபேசியில் பயனர்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளையும் தற்போது கணினியில் அனுபவிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருமானவரிக் கணக்கு தாக்கல்: காலக்கெடு மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு

டெல்லி: 2019-20 ஆண்டிற்கான வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details