தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top-10-7pm
top-10-7pm

By

Published : Jul 12, 2020, 7:09 PM IST

தமிழ்நாட்டில் இன்று 4244 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 12) 4 ஆயிரத்து 244 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470ஆக அதிகரித்துள்ளது.

ஒரு வழிப்பாதையாக மாறும் கொத்தவால் சாவடி சாலை!

சென்னை: கொத்தவால் சாவடி பகுதி ஒரு வழிப்பாதையாக மாறுகிறது என்று சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது.

மதுரையில் மீண்டும் நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கு!

மதுரை: மாவட்டத்தில் ஜூலை 14ஆம் தேதிவரை முழு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டான் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர் கைது

டெல்லி: தப்பியோடிய டான் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளரான அன்வர் தாக்கூரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆகஸ்டில் மழைக்கால கூட்டுத்தொடர்?

டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டுத் தொடர் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருந்த நிலையில், இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றது,

நினைவிழக்கும் வரவர ராவ் - சிறையிலிருந்து விடுவிக்கக் கோரும் குடும்பத்தார்

மும்பை: சிறையில் இருக்கும் சமூக செயற்பாட்டாளரான வரவர ராவின் உடல் நிலை மோசமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்க வேண்டும் எனவும் அவரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'மங்காத்தா' பட நடிகைக்குக் கரோனா!

'மங்காத்தா' படத்தில் நடித்த நடிகை ரேச்சலுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு கரோனா தொற்று உறுதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அரசியல்வாதியுமான சேதன் சவுகானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க கடற்படையில் Tactical விமானத்தை இயக்கும் முதல் கறுப்பினப் பெண் விமானி!

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையின் Tactical விமானத்திற்கு விமானியாக வரும் முதல் கறுப்பினப் பெண் லெப்டினென்ட் ஜேஜி மேட்லைன் ஸ்வெகலை கடற்படை வீரர்கள் வரவேற்றுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details