தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - chennai district news

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 7PM
Top 10 news @ 7PM

By

Published : Jul 4, 2020, 7:03 PM IST

மதுரையில் மேலும் ஏழு நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

சென்னை: மதுரை மாவட்டத்தில் ஜூலை 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஏழு நாள்களுக்கு பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை விடுமுறை... டாஸ்மாக்கில் குவிந்த மதுப்பிரியர்கள்

தருமபுரி: நாளை முழு ஊரடங்கின் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாகக் குவிந்து மதுப்பிரியர்கள் மதுவை வாங்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் ஆய்வகங்கள் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

டெல்லி: கோவிட்-19 கண்டறியும் ட்ரூநெட் பீட்டா/சிபிஎன்ஏஏடி நியூக்ளிக் அமில அடிப்படையிலான பரிசோதனையை மேற்கொள்ள விரும்பும் தனியார் ஆய்வகங்கள் உடனடியாக என்.ஏ.பி.எல் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் ஆயிரத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு!

சென்னை: சென்னையில் மட்டும் இதுவரை கரோனா பாதிப்பால் 996 பேர் உயிரிழந்த நிலையில், அதன் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் நிலைகுலைந்த பழங்குடி கிராமங்கள்: அத்தியாவசிய பொருள்களுக்கு அவதி!

நீலகிரி: கரோனா அச்சம் காரணமாக பழங்குடி கிராமத்திற்குள் வெளி ஆள்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்துவருகின்றனர்.

’முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது’

சென்னை: முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஜப்பான் பக்கபலமாக இருக்கும்!

லடாக்கில், எல்லை பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும் என இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் தெரிவித்துள்ளார்.

'அரசு மருத்துவமனைகளில் தரமான உணவு வழங்கப்படுகிறது' - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்!

புதுச்சேரி: அரசு கரோனா மருத்துவமனைகளில் தரமான உணவு வழங்கப்படுவதாக புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய தூதரகத்தில் நடந்த கொலை: உயிர்பெற்றது வழக்கு!

சவூதி அரேபிய செய்தியாளர் ஜமால் கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள அந்த நாட்டுத் தூதரகத்தில் 2018ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை, அந்த நகர நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.

'தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வந்தது' - ரசிகரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய யுவன்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றியது என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details