தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM

By

Published : Aug 21, 2020, 4:32 PM IST

1. 'சின்ன ரூட், அதிக லாபம்' - இந்திய ரயில்வேயின் புதுத் திட்டம்

டெல்லி: இந்திய ரயில்வே தனது சரக்கு ரயில் சேவையை அதிகரிக்க, அதிக கொள்ளளவுடன் அதிக முறை இயக்கக்கூடிய குறுகிய தூர வழித்தடங்களை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

2. 'வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி'- புதிய தேர்தல் விதிகள் விரைவில் வெளியீடு

கரோனா நெருக்கடிக்கு மத்தியில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பிகார் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.

3. ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: காவல் ஆணையர் அகர்வால் விளக்கம்!

சென்னை: ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் விளக்கமளித்துள்ளார்.

4. ஐபிஎல் 2020: துபாய் புறப்பட்ட சென்னை சிங்கங்கள்!

சென்னை: துபாயில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டுச் சென்றனர்.

5. கோகோய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி

டெல்லி : அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்-க்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

5. முழுமுதற் கடவுளாம் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த நாள் - அதிமுக வாழ்த்து!

சென்னை: முழுமுதற் கடவுளாம் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மன மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழுமாறு அதிமுக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. மழைக்கால கூட்டத்தொடருக்கு தயாராகும் நாடாளுமன்றம்!

டெல்லி : இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் முதல் வாரத்தில் மாற்று திட்டங்களுடன் இயங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

7. பெங்களூரு கலவரம்: தொடரும் கைது நடவடிக்கைகள்!

பெங்களூரு : பெங்களூரு கலவரத்தில் தொடர்புடைய 30 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

8. ’காண்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு கரோனாவால் அதிக ஆபத்து’ - ஆய்வில் தகவல்!

டெல்லி : காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், கண் பார்வை இழப்பு, கார்னியா அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு அது இட்டுச் செல்லும் என ஐ.ஜே.எம்.ஆர் மருத்துவ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

9. அனைத்து மருத்துவ உரிமதாரர்களுக்கும், ஹோம் டெலிவரிக்கு அனுமதி!

ஆன்லைனில் மருந்துகள் விநியோகிப்பது தொடர்பான சர்ச்சைக்கு இடையே, மார்ச் மாதத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் மருந்துகளை வாங்கவும், நுகர்வோரின் வீட்டு வாசலில் விநியோகிக்கவும் அனைத்து மருத்துவ உரிமதாரர்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

10. ”கருப்பு வெள்ளை நாயகன் நான்!” - ஹரிஷ் கல்யாண் புகைப்படங்கள்

”கருப்பு வெள்ளை நாயகன் நான்!” - ஹரிஷ் கல்யாணின் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details