தமிழ்நாடு

tamil nadu

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Jun 29, 2020, 11:18 AM IST

Published : Jun 29, 2020, 11:18 AM IST

top-10-11-am
top-10-11-am

நாட்டில் கரோனா: 24 மணி நேரத்தில் பாதிப்பு 19,459

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது. 380 பேர் உயிரிழந்துள்ளனர்.

சசிகலா விடுதலை எப்போது? - சிறை நிர்வாகம் விளக்கம்

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

தென்கொரியாவில் குறைந்துவரும் கரோனா பாதிப்பு!

ஹைதராபாத்: வேகமாகப் பரவிவரும் கரோனா தொற்றுக்கு இதுவரை உலகளவில் ஒரு கோடிக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தென்கொரியா நாட்டில் கரோனா பரவல் குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா: ஜெகன் மோகன் கோரிக்கை

அமராவதி: மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் நரசிம்மராவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

'டெல்லியில் கோவிட்-19 கட்டுக்குள் உள்ளது'- ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தகவல்

டெல்லி: டெல்லியில், கோவிட்-19 கட்டுக்குள் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ராகவ் சதா கூறியுள்ளார்.

கராத்தேவை இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிடுவதாக மிரட்டிய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர்

டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் நரிந்தர் பாத்ரா, கராத்தேவை இந்தியாவில் வெளியேற்றிவிடுவேன் என மிரட்டியதாக கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் (கேஏஐ) பொதுச்செயலாளர் அம்பேத்கர் குப்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

'கடல்வாழ் உயிரினங்கள் குறித்து கவனம் தேவை'- மத்திய அரசுக்கு ஜெய்ராம் ரமேஷ் எச்சரிக்கை!

சென்னை: சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்தும் முன்னர், கடல்வாழ் பல்லுயிர் இனங்கள், கடல் வளங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கில் 'லாக் டவுன் லவ்' குறும்படப் போட்டி

சினிமா ரெண்டெஸ்வஸ் (Cinema Rendezvous), கிரீன் காட்டெஸ்ஸெஸ் (Green Goddesses) அமைப்புகள் இணைந்து ஊரடங்கை மையமாக வைத்து குறும்படப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது.

'எனக்குக் கரோனா தொற்று இருப்பதாக நினைத்தேன்' - ஜாக் லீச்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச், நடந்துமுடிந்த தென் ஆப்பிரிக்க தொடரின்போது தனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதாக எண்ணி அச்சமடைந்ததாகக் கூறியுள்ளார்.

மும்பையில் விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த வீடு: அதன் விலை உங்களை ஆச்சரியப்படுத்தும்!

இந்த ஆண்டின் மிகவும் விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு மும்பையில் விற்கப்பட்டது. லோயர் பரேலில் உள்ள அந்த வீட்டை தொழிலதிபர் ஒருவர் ரூ. 136 கோடியே 27 லட்சத்துக்கு வாங்கியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details