தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை தடுப்பூசி முகாம் ரத்து : மாநகராட்சி இணையதளத்தில் அறிவிப்பு! - கரோனா தடுப்பூசி மையங்கள்

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, நாளை (ஜூன்30) கரோனா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம் ரத்து
தடுப்பூசி முகாம் ரத்து

By

Published : Jun 29, 2021, 11:02 PM IST

சென்னை:கரோனா தொற்றை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தனி கவனம் செலுத்தி வருகிறது.

சென்னையில் மொத்தம் 45 கரோனா தடுப்பூசி மையங்கள் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி முகாம் ரத்து

கடந்த, 28ஆம் தேதி வரை 25,36,383 நபர்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை(ஜூன்30) தடுப்பூசி முகாம் ரத்து என சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று 4,512 பேருக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details