தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நாளை மின்வெட்டு...! - மின்வெட்டு

சென்னை: நாளை (ஆக. 28) சென்னையில் சில இடங்களில் மின் வாரிய பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை மின்வெட்டு...!
சென்னையில் நாளை மின்வெட்டு...!

By

Published : Aug 27, 2020, 1:36 PM IST

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சென்னையில் நாளை (ஆக. 28) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின் தடை ஏற்படும் இடங்கள் வருமாறு:-

வேளச்சேரி மேற்கு பகுதி : விஜிபி செல்வா நகர், புவனேஸ்வரி நகர், அன்னை இந்திரா நகர், நாதன் சுப்பரமணியன் காலனி, எம். ஆர்.டி.எஸ், முத்துகிருஷ்ணன் தெரு.

தரமணி மற்றும் சின்னமலை பகுதி :கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியம், ரஞ்சித் சாலை, சூரியா நகர், காந்திமண்டபம், மருதை அவென்யூ, அம்பாடி சாலை, அருணாசலம் சாலை, வள்ளியம்மை அச்சி ரோடு.

கொட்டிவாக்கம் பகுதி :திருவள்ளுவர் நகர் 1ஆவது முதல் 7ஆவது மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் 1ஆவது முதல் 55ஆவது தெரு, பாலகிருஷ்ணா ரோடு, மகாவீர் பாகத் சாலை.

மயிலாபூர் மந்தவெளி பகுதி : ஆர் கே மட் பகுதி, வடக்கு, தெற்கு, கிழக்கு மாதா தெரு, கேசவபெருமாள் மேற்கு வார்ட், மாங்கோலி கிழக்கு டாங்க் தெரு, குமாரகுரு தெரு, பிச்சுபிள்ளை தெரு, பென்னாம்பல வைதியர் தெரு, பாலத்தோப்பு, லாலா தோட்டம், சித்தரகுளம், வடக்கு, தெற்கு மற்றும் வடக்கு அரிஸ்காரன் தெரு.

மயிலாபூர்ஆயிரம் விளக்கு பகுதி :மாடல் பள்ளி ரோடு பகுதி, அஜீஸ்முல்க் 2ஆவது தெரு, முருகேசன் நாய்க்கன் காம்பிளக்ஸ், கீரிம்ஸ் ரோடு” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க...பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிமுறைகள்! - அரசாணையாக வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details