சென்னை:மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள் என்பதால் இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாஅது என தமிழ்நாடு மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்துவதற்காகவும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்தாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன.
முதலில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் பலரும் ஆதாரை இணைக்காததால், ஜனவரி 31, மற்றும் பிப் 15ஆம் தேதி என அடுத்தடுத்து கால அவகாசம் நீட்டிக்கபப்பட்டது. இறுதியாக பிப்.28 ஆம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நாளையுடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இதற்குமேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று மின் வாரியம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மீண்டும் 'பவாரியா கொள்ளையர்கள்' ஆதிக்கமா? - சிறப்பு தொகுப்பு