தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளையும் (டிச.19) தொடரப்போகும் கனமழை.. தென் மாவட்டங்களின் நிலை என்ன? - சூறாவளிக்காற்று

Heavy Rain in Southern districts: தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளையும் (டிச.19) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tomorrow as well heavy rain possibility in southern districts
நாளையும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 3:28 PM IST

சென்னை:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (டிச.18) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுமை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளையும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். மேலும், விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், திண்டுக்கல், நீலகிரி, மதுரை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (டிச.19):தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுமை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 20 முதல் 24ஆம் தேதிகள் வரை மழை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுமை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:இன்று (டிச.18) தென்கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (டிச.20) லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:தென் மாவட்டங்களை மிதக்க வைத்த மழை; திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details