தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.40 ஆயிரம் செலவிட்டும் லாபம் இல்லை... தலைகீழாக மாறிய தக்காளியின் விலை! - தக்காளி விலை சரிவு

'ஜூலை மாதத்தில் தங்கத்திற்கு நிகராக வலம் தந்த தக்காளி தற்போது, மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இச்செய்தி குறிப்பு...

Tomato prices at peak Farmers have lost due to the sudden collapse
Tomato prices at peak Farmers have lost due to the sudden collapse

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 10:55 PM IST

சென்னை: இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக உச்சத்தில் இருந்த தக்காளியின் விலையானது, செப்டம்பர் மாதம் அவற்றை தலைகீழாக புரட்டி போட்டது. இதனால், விவாசாயிகள் மற்றும் வியாபரிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

சென்னையில் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் சுமார் 470 லோடு லாரிகளில் தினமும் காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

அதில், முக்கியமாகக் கொண்டுவரப்படுவது தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவை தான். இதில், தக்காளி மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 900 முதல் 1000 டன் விற்பனைக்காகக் கொண்டுவரப்படும் நிலையில், தற்போது தேவைக்கு அதிகமாகவே 1200 டன் தக்காளிகள் கொண்டு வரப்படுகின்றன. இதனால், தக்காளி விலை சில்லறை விற்பனையில் ரூ.20க்கும் இதேப்போல் மொத்த விற்பனையில் கிலோ ரூ.9-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

ஜூலை மாதத்தில் உச்சம்: ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் தக்காளியின் விலை ஏற்றத்திற்கு காரணம் வட மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் ஆந்திரா, கர்நாடக ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் அப்போது, தக்காளியின் விலை உச்சத்தை தொட்டு பொதுமக்களை அதிர்ச்சி செய்ய வைத்தது.

அதேபோல் தமிழ்நாட்டில் தக்காளி நடுவு காலம் என்பது மார்ச் முதல் ஜூன் வரை. ஆனால், இந்த வருடம் தக்காளி பயிரில் பூ சரிவர நிற்கவில்லை என்று விவாசியகள் தரப்பில் இருந்தது தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம். மேலும் தக்காளியின் பயிர் பருவம் தாண்டி பெய்த மழையும் இன்னொறு காரணம் ஆகும்.

மேலும், கடந்த 6 (ஏப்பரல் மாதத்தில்) மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதில் கோபமடைந்து சில விவசாயிகள் தக்காளியை நடுவு செய்யவில்லை. அதனால் தக்காளி உற்பத்தி தமிழ்நாட்டில் அன்றைய சூழ்நிலையில், கிலோ 200-க்கு விற்கபட்டது. அதைத் தொடர்ந்து, தக்காளியின் விலை ஆகஸ்ட் மாதத்தில் படியாக படியாக குறைந்து வந்தது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் கிலோவிற்கு ரூ.40 என்ற நிலையில், நிலையாக விற்பகப்ப்ட்டு வந்தது.

அதேப்போல் 6-மாதங்களுக்கு முன்பு தக்காளி சாகுபடியானது, கோவை, உடுமலைப்பேட்டை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் விளையும் தக்காளி அங்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொடுத்து விட்டார்கள். மேலும் அன்றைய தினத்தில் தக்காளியின் தேவை நாடு முழுவதும் இருந்தது. இதனால் ஆந்திரா மட்டும் கர்நாடகத்தில் தான் இந்தியாவில் பெரும்பாலுமான வியாபாரிகள் தக்காளி கொள்முதல் செய்து வந்தார்கள்.

மேலும், அன்றைய தக்காளி விவசாயிகள் லட்சகணக்கிலும், சிலர் கோடி கணக்கிலும் லாபம் பார்த்தனர். அன்றைய நிலையில் தக்காளி மலிவு விலைவில் கிடைப்பதற்காக தக்காளியை அரசு மலிவு விலையில், நுகர்வோர் கடைகளிலும், பசுமை கடைகளிலும் விற்பனை செய்யபட்டது. ஆனால் தற்போது காட்சிகள் மாறி தக்காளி விலை தலைகீழாக மாறியுள்ளது.

இது குறித்து கோயம்பேடு மொத்த சிறு வியாபரிகள் சங்கத்தின் நிர்வாகி முத்துகுமார் கூறுகையில், “ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலையானது வரலாறு காணத அளவிற்கு உச்சத்தை அடைந்தது. ஆனால் தற்போது, தக்காளியின் விலை பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. ஜூலை மாதத்தில் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.

ஒரு நாளைக்கு 300-டன் தக்காளி மட்டுமே வந்தது. ஆகஸ்ட் மாதத்தில் அந்த நிலை சீராகி நிலையான விலையில் இருந்தது. ஆனால் செப்டம்பர் மாதம் தொடக்கத்திலே தக்காளி விலை மிகவும் மோசமானது, தற்போது மொத்த விலையில் தக்காளியானது கிலோ ரூ.9 மட்டுமே விற்பனை ஆகி வருகிறது. மேலும் எங்களுக்கு லாபம் என்பது சுத்தமாக இல்லை. விலை அதிகரிப்பால், லாபம் இல்லை, விலை சரிந்தாலும் லாபம் இல்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

இது குறித்து வியாபரி சௌந்தராஜன் கூறியதாவது, “ஓசூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி ஆகிய மாவட்டத்தில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் தக்காளியானது விற்பனைக்கு சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும். சரசரியாக தினமும் நாள் ஒன்றுக்கு சுமார் 900 முதல் 1000 டன் விற்பனைக்காகக் கொண்டுவரப்படும்.

ஆனால் தற்போது இன்று (செப்.9) 90-வண்டிகளில் 1300டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. எங்களால், தக்காளி வைத்து விற்பனை செய்ய முடியவில்லை. மேலும் லாபம் என்பது கேள்வி குறியாக இருக்கிறது. தக்காளி மகசூல் அதிகமாக இருப்பதால், இன்னும் சில வாரங்களும் தக்காளியின் விலை சரிவை தான் சந்திக்கும்” என்றார்.

இது குறித்து பொள்ளாச்சியில் உள்ள விவசாயி கந்தசாமியிடம் தொலைப்பேசி மூலம் கேட்டப்போது, “3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் விளைச்சல் பாதித்தும், செடிகள் அழுகிவிட்டதால் தக்காளி கிலோ ரூ.200-ஐ கடந்து விற்பனையானது.

இதனால் வடமாநிலங்களில், தென் இந்தியாவிலும் இருந்து வியாபாரிகள் கொள்முதல் வியாபரிகள் அனைவரும் வடக்கு கர்நாடகாவில் இருந்து கொள்முதல் செய்தனர். இந்நிலையில் தமிழகத்தில் தக்காளி சாகுபடி செய்யும் பகுதிகளான பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, திண்டுக்கல், கிணத்துகடவு, மதுரை, தேனி, பேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதேப்போல், மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து, தக்காளி விலை சரியத் தொடங்கியது. தற்போது கொள்முதல் விலை மிகவும் குறைந்து, ரூ.5 முதல் ரூ.7-விற்கு இருக்கிறது. ஒரு ஏக்கரில் 11,000 நாற்றுகள் நடவு செய்வோம், அதில் 9,000 நாற்றுகள் தான், வளரும். அதேப்போல் ஒரு செடிக்கு 3 கிலோ வீதம் 9,000 செடிகளில் இருந்து மொத்தம் 27,000 கிலோ மகசூல் கிடைக்கும். இதற்கு சுமார் 40ஆயிரம் செலவிடுகிறோம்.

ஆனால் தற்போது விலை சரிவால் போதிய லாபம் இல்லை. தக்காளி என்பது 90 நாட்கள் பயிர், 3 மாதங்களுக்கு முன்பு உச்சம் அடைந்த தக்காளியின் விலை, சாகுபடி சீரனா உடன் தற்போது சரிவை சந்திக்கிறது. இதற்கு காரணம். 3-மாதத்தில் வந்த லாபத்தை நம்பி பல விவசாயிகள் தக்காளி பயிரிட தொடங்கினார்கள். ஆனால் நிலைமை தற்போது வேறு மாதிரியாக இருக்கிறது. தக்காளி விலை தற்போது சரிவை சந்தித்தாலும், எதிர் வரும் காலத்தில் தக்காளி மீண்டும் உச்சத்தை அடையும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அவன் எங்கள் செல்ல மகன்: வீட்டில் யானை வளர்க்கும் கேரள தம்பதி!

ABOUT THE AUTHOR

...view details