தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tomato Price Drop: மக்களுக்கு ஒரு குட் நியூஸ் - சென்னையில் தக்காளியின் விலை குறைந்தது! - காய்கறிகளின் விலை குறையத் தொடங்கியது

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை ரூ.10 - ரூ.20 வரை குறைந்து தற்பொழுது ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் தக்காளியின் விலை குறைந்தது
சென்னையில் தக்காளியின் விலை குறைந்தது

By

Published : Jul 23, 2023, 4:31 PM IST

சென்னை: கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து காய்கறிகள் தினமும் விற்பனைக்காக வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை தங்கத்தின் விலை போல் தினமும் மக்காளால் பார்க்கப்படும் பொருளாய் இருந்து வருகிறது. ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்தே தக்காளி விலை அதிகமாக தொடங்கியது. கோயம்பேடு சந்தையில் ஜூன் மாதத்தில் மொத்த விலையில் கிலோ ரூ.50க்கும், சில்லறை விற்பனையில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், இம்மாதத்தின் தொடக்கத்தில் புதிய உச்சமாக ரூ.100ஆக உயர்ந்தது.

அதைத் தொடர்ந்து தக்காளி விலை சில்லறை விற்பனையில் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யபட்டது. மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மக்களை சிறிது சந்தோஷப்படும் வகையில் தக்காளி மற்றும் சில காய்கறிகளின் விலை இன்று (ஜூலை23) குறையத் தொடங்கியது. அதன்படி தக்காளி ரகத்திற்கு ஏற்றது போல் ரூ.70 முதல் ரூ.100 வரை மொத்த விலையிலும், ரூ.90 முதல் ரூ.120 வரை சில்லறை விற்பனையிலும் விற்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க:திருச்சியில் அப்சல் கான் என்பவரது வீட்டில் என்ஐஏ சோதனை

இது குறித்து பேசிய கோயம்பேடு காய்கறி சங்கத்தின் பொருளாளர் சுகுமார், "தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும்போது கோயம்பேடு சந்தைக்கு 50 முதல் 80 வண்டிகளில் 750 டன் முதல் 1000 டன் வரை தக்காளி விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது விளைச்சல் குறைவு என்பதால் 20-30 வண்டிகள 300 டன்னில் இருந்து 450 டன் வரை மட்டுமே வருகின்றன. இதனால் தக்காளின் விலை அதிகரித்தது.

தற்போது தக்காளி ரகத்திற்கு ஏற்றதுபோல் ரூ.70 முதல் ரூ.100 வரை மொத்த விலையிலும், ரூ.90 முதல் ரூ.120 வரை சில்லறை விற்பனையிலும் விற்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் தக்காளி குறைவான அறுவடை செய்வதாலும் தெற்கு கர்நாடக, ஆந்திராப் பகுதிகளில் இருந்து, தக்காளிகள் சென்னை கோயம்பேடுக்கு விற்பனைக்கு வருகின்றன. இதனால், கடந்த இரண்டு நாட்களாக தக்காளி விலை சற்று குறைந்து உள்ளது.

இதைத் தொடர்ந்து, ரூ.170க்கு விற்பனையான சின்ன வெங்காயம் ரூ.150க்கும், பீன்ஸ் ரூ.60-க்கும், கேரட் ரூ.50 முதல் ரூ.60 வரையும், இஞ்சி கிலோ 120-க்கும், பச்சை பட்டாணி ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

தக்காளி விலையினை கட்டுப்படுத்த தமிழக அரசு கூட்டுறவுத் துறை மூலம் பசுமை காய்கறி கடைகளில் ரூ.60-க்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து 7 டன் தக்காளியை தமிழக அரசு கொள்முதல் செய்து பசுமை காய்கறி கடைகள் மூலம் விற்பனை செய்து வருகின்றது. வரலாறு காணாத அளவிற்கு இந்த ஆண்டு உச்சம் தொட்ட தக்காளியின் விலையால் நாட்டு மக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

தற்பொழுது சென்னையில் கணிசமாக தக்காளியின் விலை குறையத் தொடங்கியுள்ளதை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க:மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை தமிழகத்திற்கு பயிற்சி எடுக்க அழைப்பு விடுத்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details