சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் சேஷாத்திரி நாதன். இவர் இறக்குமதி தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், நேற்று காலை 8 மணி அளவில் தியாகராய நகர் கோட்ஸ் ரோடு பகுதியில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்ஃபோனை பறித்து சென்றார்.
தொழிலதிபரிடம் இருந்து செல்ஃபோன் திருடிய நபர் கைது.. - chennai
சென்னை: தியாகராயநகரில் நடைபயிற்சி மேற்கொண்ட தொழிலதிபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்ஃபோனை திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து, பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண் போலியானது என்றும், அது அமைந்தகரையைச் சேர்ந்த பாஷா என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, தனிப்படை காவல் துறையினர் பாஷாவை கைது செய்தனர். விசாரணையில், செல்ஃபோனை பாண்டி பஜாரில் உள்ள ஒரு செல்போன் கடையில் விற்றதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, திருட்டு செல்போனை வாங்கியதற்காக கடையின் உரிமையாளரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த 20க்கும் மேற்பட்ட திருட்டு செல்ஃபோன்களையும் பறிமுதல் செய்தனர்.