தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயானபூமிக்கு உடலை எடுத்துச் செல்ல கட்டணமில்லா எண் அறிவிப்பு! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: சென்னையில் கரோனா மற்றும் இதர காரணங்களால் இறந்தவர்களின் உடல்களை மயானபூமிக்குக் கொண்டு செல்ல மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயானபூமிக்கு உடலை எடுத்துச் செல்ல கட்டணமில்லா எண் அறிவிப்பு
மயானபூமிக்கு உடலை எடுத்துச் செல்ல கட்டணமில்லா எண் அறிவிப்பு

By

Published : May 25, 2021, 10:17 PM IST

சென்னை : சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா அல்லது இதர காரணங்களால் இறந்தவர்களின் உடல்களை மயானபூமிக்குக் கொண்டு செல்வதற்கு மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ள, 15 அமரர் ஊர்தி வாகனங்களின் சேவையைப் பெற 155377 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த 15 வாகனங்களும் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் மாநகராட்சி சார்பில் இன்று வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்வதற்காக, இந்த 15 வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்க நடவடிக்கை:அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

ABOUT THE AUTHOR

...view details