தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறந்த கேபிள் டிவி சேவையை குறைந்த கட்டணத்தில் பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 16 ஆயிரத்து 712 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 35 லட்சத்து 64 ஆயிரத்து 589 விலையில்லா SD செட்டாப் பாக்ஸ்களையும், 3 ஆயிரத்து 728 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக ரூ.500 என்ற குறைந்த விலையில் 38 ஆயிரத்து 200 HD செட்டாப் பாக்ஸ்களையும் வழங்கியுள்ளது.
தற்பொழுது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் ரூ.140+18 விழுக்காடு வரி என்ற மாதக்கட்டணத்தில் 61 கட்டணச் சேனல்களும், 137 கட்டணமில்லா சேனல்களும் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சந்தாதாரர்கள் மாத கட்டணமாக ரூ.140+18 விழுக்காடு வரி மட்டும் செலுத்தினால் போதும். கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. கூடுதல் தொகை வசூல் செய்வதாக புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-2911-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.