தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனித்திறன் வீரன் நீரஜ் சோப்ரா- தொல். திருமாவளவன்! - ஒலிம்பிக்கில்

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை தனித்திறன் வீரன் என புகழாரம் சூட்டியுள்ளார் விசிக நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்.

Tokyo Olympics: India’s Neeraj Chopra wins historic says Thol Thirumavalavan
Tokyo Olympics: India’s Neeraj Chopra wins historic says Thol Thirumavalavan

By

Published : Aug 7, 2021, 9:32 PM IST

சென்னை : டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு விசிக நிறுவனத் தலைவரும், இரு முறை மக்களவை எம்பியுமான தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “#ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் தலைநிமிர்வைத் தந்துள்ள தனித்திறன் வீரன் #நீரஜ்சோப்ரா அவர்களுக்கு விசிக சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுகள். சாதனையாளர் நீரஜ் சோப்ரா அவர்களுக்கு பெருமிதமோங்கும் பெருவணக்கம்!” எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், “ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் 37வது பதக்கம்- 8வது தங்கம்-தனித்திறன் போட்டியில் 2வது தங்கம் இன்று நீரஜ் சோப்ரா வென்ற தங்கம்!

இந்த ஒலிம்பிக்கில் இது முதலாவது தங்கம்! ஒலிம்பிக் போட்டியில் புதிய வரலாறு படைத்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள சோப்ராவுக்கு எமது பாராட்டுகள்” எனத் தெரிவித்திருந்தார்.

ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு தமிழ்நாட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : நீரஜ் சோப்ரா சாதனை ஈடு இணையற்றது- மருத்துவர் ராமதாஸ்!

ABOUT THE AUTHOR

...view details