சென்னை:இந்திய மக்களின் சேமிப்பு என்றாலே மக்கள் மனதில் முதலில் தோன்று எண்ணம் தங்கம். முக்கியமாக நடுத்தர, பாமர மக்களுக்கு அத்தியாவசிய, எதிர்காலத் தேவைக்குக் கைகொடுக்கும் ஒரு முக்கிய முதலீடு மற்றும் உதவும் பொருளாக பார்ப்பது தங்கம் மட்டும் தான்.
ஆனால், தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதார சுழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொருத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன் வைத்து தான் தினமும் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாகக் குறைந்து வந்தது. சனிக்கிழமை அன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. இதைத் தொடர்ந்து. தங்கம் விலையானது, நேற்று(செப்-25) மக்களை மிகவும் ஏமாற்றம் அடைய வைத்தது. அதாவது,கிராமுக்கு 1 ரூபாய் என்று சவரனுக்கு 8 ரூபாய் தான் குறைந்தது. இந்நிலையில், இன்று (செப் 26) தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.120 வரை குறைந்துள்ளது.