சென்னை:காற்றின் திசையின் காரணமாக தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு (அக்டோபர் 8,9) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி என ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதேபோல், அக்டோபர் 10ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி 15 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.