சென்னை:இது தொடர்பாகசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஆகஸ்ட் 13) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 14) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மழைப்பதிவு: கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம், திருச்சி மாவட்டம் லால்குடி ஆகிய பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆகிய இடங்களில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்க ஊரூ மெட்ராஸு.. சென்னை தினத்தின் கொண்டாட்டம் எப்படி இருக்கப் போகிறது?