தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 11,815 பேருக்கு கரோனா - குறையும் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் நேற்று (ஜூன்.14) புதிதாக 11 ஆயிரத்து 815 பேருக்கு கரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், 23 ஆயிரத்து 207 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

today-tamilnadu-covid-bulletin
குறையும் உயிரிழப்பு: தமிழ்நாட்டில் தொடர்ந்து கணிசமாகக் குறையும் கரோனா!

By

Published : Jun 15, 2021, 8:33 PM IST

சென்னை:இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாட்டில் நேற்று (ஜூன்.14) 11 ஆயிரத்து 815 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 23 ஆயிரத்து 207 பேர் குணமடைந்துள்ளனர். 267 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 225 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 78 ஆயிரத்து 298 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 23 ஆயிரத்து 15ஆகவும் அதிகரித்துள்ளது. அத்துடன் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 68ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 1,563 நபர்களுக்கும், ஈரோட்டில் 1,270 நபர்களுக்கும், சென்னையில் 793 நபர்களுக்கும், சேலத்தில் 759 நபர்களுக்கும், திருப்பூரில் 728 நபர்களுக்கும் புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று அதிக அளவில் இருந்த மாவட்டங்களில் தற்போது புதிதாக பாதிப்புகள் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 5,26,614
  • கோயம்புத்தூர் - 2,06,833
  • செங்கல்பட்டு -1,52,257
  • திருவள்ளூர் -1,08,369
  • சேலம் -80,912
  • திருப்பூர் -76,101
  • ஈரோடு -78,820
  • மதுரை -70,503
  • காஞ்சிபுரம் -68,597
  • திருச்சிராப்பள்ளி -65,783
  • தஞ்சாவூர் -58,964
  • கன்னியாகுமரி -57,072
  • கடலூர் -55,426
  • தூத்துக்குடி -52,846
  • திருநெல்வேலி -46,765
  • திருவண்ணாமலை -46,765
  • வேலூர் -45,768
  • விருதுநகர் -43,075
  • தேனி -41,061
  • விழுப்புரம் -40,850
  • நாமக்கல் -40,750
  • ராணிப்பேட்டை -39,130
  • கிருஷ்ணகிரி -37,622
  • நாகப்பட்டினம் -36,238
  • திருவாரூர் -35,404
  • திண்டுக்கல் -30,578
  • புதுக்கோட்டை -25,792
  • திருப்பத்தூர் -26,623
  • தென்காசி -25,769
  • நீலகிரி -26,246
  • கள்ளக்குறிச்சி -25,012
  • தருமபுரி -22,731
  • கரூர் -20,790
  • ராமநாதபுரம் -18,979
  • சிவகங்கை -16,499
  • அரியலூர் -13,769
  • பெரம்பலூர் -10,489
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்- 1,005
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 1,075
  • ரயில் மூலம் வந்தவர்கள்- 4,28

ABOUT THE AUTHOR

...view details