சென்னை:தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து இன்று புதிதாக 25,317 நபர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 32 ஆயிரத்து 262 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 483 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், ”தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 575 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 25 ஆயிரத்து 316 நபர்களுக்கும், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 25 ஆயிரத்து 317 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு கோடியே 73 லட்சத்து 67 ஆயிரத்து 695 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 21 லட்சத்து 48 ஆயிரத்து 346 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களில், தற்போது மருத்துவமனையில் மற்றும் தெளிவுபடுத்தும் மையங்களில் இரண்டு லட்சத்து 88 ஆயிரத்து 702 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 32 ஆயிரத்து 263 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 34 ஆயிரத்து 439ஆக உயர்ந்துள்ளது. மேலும், மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனைகளில் 204 நோயாளிகள், அரசு மருத்துமனைகளில் 279 நோயாளிகள் என 483 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 205ஆக உயர்ந்துள்ளது. மேலும், இணை நோயில்லாத 115 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் புதிதாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2,217ஆகக் குறைந்துள்ளது. கோயம்புத்தூரில் 3,061 நபர்களும், ஈரோட்டில் 1,488 நபர்களும், சேலத்தில் 1,290 நபர்களும், திருப்பூரில் 1,252 நபர்களும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 5,09,234
- கோயம்புத்தூர் -1,76,910
- செங்கல்பட்டு - 1,42,715
- திருவள்ளூர் -1,02,709
- மதுரை -66,056
- காஞ்சிபுரம் -64,396
- சேலம் -68,066
- திருப்பூர் -63,552
- திருச்சிராப்பள்ளி -59,073
- ஈரோடு -59,768
- கடலூர் -49,870
- கன்னியாகுமரி -50,486
- தூத்துக்குடி -48,760
- தஞ்சாவூர் -49,125
- திருநெல்வேலி -44,009
- வேலூர் -42,907
- திருவண்ணாமலை -42,112
- விருதுநகர் -38,716
- தேனி -37,369
- ராணிப்பேட்டை -35,356
- விழுப்புரம் -35,647
- கிருஷ்ணகிரி -33,648
- நாமக்கல் -34,005
- திண்டுக்கல் -27,630
- திருவாரூர் -30,956
- நாகப்பட்டினம் -30,431
- புதுக்கோட்டை -23,448
- திருப்பத்தூர் -23,522
- தென்காசி -23,074
- கள்ளக்குறிச்சி -21,904
- நீலகிரி -20,241
- தருமபுரி -19,290
- ராமநாதபுரம் -17,290
- கரூர் -18,015
- சிவகங்கை -14,838
- அரியலூர் -11,806
- பெரம்பலூர் -8,905
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1,004
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,075
- ரயில் மூலம் வந்தவர்கள் 428 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'கறுப்புப் பூஞ்சை நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சை அவசியம்'