சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 16-ஆம் தேதி அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று மழைக்கு வாய்புள்ள இடங்கள்:திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை(அக்-13) மழைக்கு வாய்புள்ள இடங்கள்:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழைப்பதிவு:தமிழக பகுதிகளில், மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க்கு சுழற்ச்சியால, கடந்த 24-மணி நேரத்தில், அதிகபட்சமாக, மதுரை நகரம், மதுரை வடக்கு ஆகிய இடங்களில், தலா 12 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது, இதேப்போல், தல்லாகுளம் (மதுரை), மேட்டுப்பட்டி (மதுரை) தலா 10செ.மீ மழைப்பதிவாகி உள்ளது, பெரியபட்டி (மதுரை), பெரியகுளம் (தேனி) தலா 9செ.மீ மழைப்பதிவாகி உள்ளது, பொன்னமராவதி (புதுக்கோட்டை), சாத்தியார் (மதுரை) தலா 8செ.மீ மழைப்பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. கோவை, திருச்சி, தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில், 5 செ.மீ முதல் 1.செ.மீ வரை மழை பாதிவாகி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க:பீகார் ரயில் விபத்து; 1,006 பயணிகளுடன் கவுகாத்திக்கு சிறப்பு ரயில் சேவை தொடக்கம்!