நாடு முழுவதும் தொடர்ந்து ஏழாவது நாளாக, இன்று (நவ.2) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 35 காசுகள் உயர்ந்துள்ள நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 ரூபாய் 4 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 98 ரூபாய் 48 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை - அவதியில் வாகன ஓட்டிகள் - பெட்ரோல் விலை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 106 ரூபாய் 66 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை
இதனைத் தொடர்ந்து நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.49 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.101.56 ஆகவும் விற்பனையாகி வருகிறது. மேலும், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 106 ரூபாய் 66 காசுகளுக்கும், டீசல் விலையில் மாற்றமின்றி 102 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது.