சென்னை:தமிழ்நாட்டில் இயங்கி வரும் 6 ஆயிரத்து 434 டாஸ்மாக் கடைகள் மூலம் ஆண்டுதோறும் 36 ஆயிரத்து 752 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், தனியார் மது ஆலைகளில் இருந்து மதுபாட்டில்களை கொள்முதல் செய்து, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் டாஸ்மாக் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், இன்று (மார்ச் 07) முதல் மதுபாட்டில்கள் விலை 10 முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குறைவான விலையான 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட குவாட்டர் மதுபாட்டில் தற்போது 130 ரூபாயாக விற்கப்படுகிறது.
மதுபான விலை இன்று முதல் உயர்வு மற்ற ரக மது பாட்டில்கள் குவாட்டருக்கு 20 ரூபாய், ஆஃப் மதுபாட்டில்களுக்கு 40 ரூபாய், ஃபுல் மதுபாட்டில்களுக்கு 80 ரூபாய் வரை கூடுதலாக விற்கப்படுகிறது. மதுபான விலை உயர்வால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 4 ஆயிரத்து 396 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்த்தப்பட்ட மதுபான பட்டியல் இந்த திடீர் விலை ஏற்றத்தை கேட்ட மதுப்பிரியர்கள், ஏற்கனவே மதுபாட்டில்களுக்கு 5 ரூபாய் அதிக கட்டணம் வசூலித்தனர். தற்போது, அரசாங்கமே 10 ரூபாய் கூடுதலாக விற்றால் டாஸ்மாக் கடைகளில் மேலும் கட்டணம் உயர்த்தி விற்கப்படும் என வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:டாஸ்மாக் கடைகள் திறப்பை தடுக்கலாம்... மக்களுக்கு புதிய அதிகாரம்...