சென்னை :தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in, www.tngasa.in என்கிற இணையதளத்தில் மாணவர்கள் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம்தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர்கள் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு இன்றுவரை விண்ணப்பிக்கலாம்.
கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் மூலம் விண்ணப்பம் செய்த மாணவர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும்.