தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! - tngasa

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் (ஜூலை 7) என அறிவிக்கப்பட்டுள்ளது

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

By

Published : Jul 7, 2022, 12:40 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதனால் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.

இது குறித்து கல்லூரிக்கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி கூறும்போது, “தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், ஜூன் 6ஆம் தேதி மாலை 6 மணி வரையிலும் 3லட்சத்து 55ஆயிரத்து 968 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2லட்சத்து 93ஆயிரத்து 327 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். 2 லட்சத்து 606ஆயிரத்து 43 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனர் என கூறினார்.

இந்த விண்ணப்ப பதிவுக்கு இன்று கடைசி நாள் ஆகும். சிபிஎஸ்இ, பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்னும் வராததால், அவர்களுக்காக கூடுதல் அவகாசம் தரப்பட வாய்புள்ளதால், மேலும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நீட் தேர்வால் தமிழ் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்கள் - டிஜிபி சைலேந்திரபாபு வேதனை

ABOUT THE AUTHOR

...view details