சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலக வங்கி, உலக அரசியல், சர்வதேச கமாடிட்டி டிரேடிங் உள்ளிட்டவற்றை அடிப்படையாக் கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் இந்திய மக்கள் எப்போது எதிர்காலத்திற்கான சேமிப்பை 2 விஷயங்களில் முதலீடு செய்கின்றனர்.
அதில், ஒன்று அசையா சொத்துக்களான நிலம், வீடு. மற்றொன்று, தங்கம், வைரம் போன்ற நகை ஆபரணங்கள். தங்கத்தில் ஏன் பலரும் முதலீடு செய்கிறார்கள் என்றால், வருங்கால அத்தியாவசிய அல்லது எதிர்பாராத தேவைக்கு கை கொடுக்கும் என்ற எண்ணத்தில் என்று கூட சொல்லலாம்.
தங்கத்தின் விலை அவ்வபோது குறைந்து காணப்பட்டாலும், பல சமயங்களில் பல மடங்கு அதிகமான விலையை தொட்டு விற்பனையாகி வருகிறது. என்னதான் தங்கம் உயர்ந்தாலும், குறைந்தாலும் அதகான தேவை மக்கள் மத்தியில் இருந்த வண்ணமே உள்ளது. இதனால் தான் தங்கத்தின் விலையானது, தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
சில நாட்களுக்கு ஆடி மாதம் என்பதால், எந்தவித வீட்டு விசேஷங்கள் நிகழாது. ஆகையால், நாளுக்கு நாள் தங்கம் குறைந்த வண்ணமே இருந்தது. ஆனால், தற்போது ஆடி மாதம் முடிந்தவுடனே தங்கம் தனது வேலையைக் காட்டத் துவங்கியது. இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையானது, ஏற்றத்துடன் இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக குறைந்து காணப்பட்டது. ஆனால் வார இறுதியான இன்று தங்கத்தின் விலை மறுபடியும் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,530க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,240-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியில் விலையில் மாற்றமின்றி நேற்றைய (செப்.7) விலையில் கிராமுக்கு ரூ.77.50க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனை செய்யபட்டு வருகிறது.
இன்றைய நிலவரம்: (செப்டம்பர் 08, வெள்ளிக்கிழமை)
- 1 கிராம் தங்கம் (22கேரட்) – ரூ.5,530
- 1 சவரன் தங்கம் (22கேரட்) – ரூ.44,240
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) – ரூ.6,000
- 1 கிராம் வெள்ளி – ரூ.78.50
- 1 கிலோ வெள்ளி – ரூ.78,500
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: வேலூரில் விதவிதமாய் தயாராகும் விநாயகர் சிலைகள் - ஓர் சிறப்புப் பார்வை!