சென்னை: இந்தியாவில் உள்ள மக்கள் எப்போது எதிர்காலத்திற்கான சேமிப்பை 2 விஷயங்களில் தான் அதிகம் முதலீடு செய்வார்கள். ஒன்று அசையா சொத்துக்களான நிலம், வீடு போன்றவை. மற்றொன்று, தங்கம் போன்ற நகை ஆபரணங்கள். நடுத்தர குடும்பத்தில் இருந்து, உயர்தர குடும்பம் வரை நகை எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்கி சேர்க்கத் தான் செய்கின்றனர். அதன் முக்கிய காரணம் முதலீடே எனலாம்.
வருங்கால அத்தியாவசிய அல்லது எதிர்பாராத தேவைக்கு கை கொடுக்கும் என்ற எண்ணத்தில் என்று கூட சொல்லலாம். அப்படிப்பட்ட தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில், சர்வதேச கமாடிட்டி மார்க்கெட்டை (commodity market) பொருத்தே நிர்ணயம் செய்யபட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் விலையானது, தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.
கடந்த மாதம் ஆடி என்பதால், எந்தவித வீட்டு விசேஷமும் நடைபெறாது. ஆகையால், நாளுக்கு நாள் தங்கம் குறைந்த வண்ணமே இருந்தது. ஆனால், ஆடி மாதம் முடிந்தவுடனே தங்கம் தனது வேலையைக் காட்டத் துவங்கியது. மேலும் இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையானது, ஏற்றத்துடன் இருந்த நிலையில், இன்று திடீரென குறைந்துள்ளது. அதனால் இல்லத்தரசிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.