சென்னை:சர்வதேச பொருளாதர சூழலில் இரண்டு வாரங்களாக தங்கம் விலை அதிகரித்து, தற்போது தங்கத்தின் விலை சர்வதேச கமாடிட்டி மார்க்கெட்டை பொருத்து தங்கம் விலை நீர்ணயம் செய்யபட்டுவருகிறது. இதனால் தங்கத்தின் விலையானது, தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். சென்னையில், கடந்த 3 நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
44-ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆகும் தங்கம்:கடந்த மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக, ரூபாய் 45 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அமெரிக்காவில் நிலவிய பொருளாதார சூழல், தொடர்ந்து திவாலான வங்கிகள் என பல்வேறு காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது ஏழைக்கு எட்டா கனியாக மாறியிருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் தங்கத்தின் விலையானது, குறைந்து வந்தாலும் ஆகஸ்ட் 29 முதல் 31 ஆம் தேதி வரை தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 520 வரை உயர்ந்து விற்பனை ஆனது. இதனால் நேற்று (ஆகஸ்ட் 31) தங்கத்தின் விலை, சவரன் ரூபாய் 44 ஆயிரத்து 360 விற்கபட்டது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்:சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 10 குறைந்து ரூபாய் 5 ஆயிரத்து 535க்கும், சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூபாய் 44 ஆயிரத்து 280க்கும் விற்பனையாகி வருகின்றன. வெள்ளி ஆனது, கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 80.20க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூபாய் 80 ஆயிரத்து 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.