தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே வாரத்தில் ரூ.1000 வரை குறைந்த தங்கம்.. இன்றைய விலை நிலவரம் என்ன? - தங்கம் விலை

Today Gold Price in chennai: சென்னையில் இன்று (செப்.29) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.43,120-க்கு விற்பனையாகி வருகிறது.

Today Gold Price in chennai
தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் தங்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 12:17 PM IST

சென்னை:தங்கம் விலை என்பது, சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச வங்கிகளின் நிலைபாடு, முதலீட்டுளார்களின் முதலீடுகள், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உலகளாவிய சம்பவங்கள் என உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும் இந்திய மக்களின் மனதில் சேமிப்பு என்றாலே மக்கள் முதலில் தோன்றும் எண்ணம் தங்கம். முக்கியமாக நடுத்தர, பாமர மக்களுக்கு அத்தியாவசிய, எதிர்காலத் தேவைக்கு கைகொடுக்கும் ஒரு முக்கிய முதலீடு மற்றும் உதவும் பொருளாக பார்க்கப்படுவது தங்கம் மட்டும் தான்.

ஆனால், தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொருத்து நீர்ணயம் செய்யபட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் விலையில் தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. அந்தவகையில் தங்கம் விலை இன்று (செப்.29) சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. மேலும் இந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலையானது ரூ.1008 வரை குறைந்துள்ளது நகை முதலீட்டாளர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம்: செப்டம்பர் 26 ஆம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,040க்கு விற்கப்ட்டது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலை குறைந்து கொண்டே வந்து, 44 ஆயிரத்திற்கு கீழே சென்றது. மேலும் நேற்று மட்டும் அதிரடியாக தீடிர் சரிவை சந்தித்த தங்கம் விலை கிராமுக்கு ரூ.70ம், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.43,280க்கும் விற்கப்பட்டு வந்ததது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது எனலாம்.

இன்றைய தங்கத்தின் விலை:சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.29) கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5 ஆயிரத்து 390க்கு விற்பனை. அதாவது சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43 ஆயிரத்து 120க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல, 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46 ஆயிரத்து 880க்கும், வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து, ரூ.77 ஆயிரத்து 500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரம் - (செப்.29)

  • 1கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,390
  • 1சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.43,120
  • 1கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.5,860
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.46,880
  • 1கிராம் வெள்ளி - ரூ.77.50
  • 1-கிலோ வெள்ளி - ரூ.77,500

இதையும் படிங்க: Walajah Palar River: வாலாஜா பாலாறு அணைக்கட்டில் இருந்து 1,350 கன அடி நீர் வெளியேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details