தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.43 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை! தங்கம் வாங்க சரியான நேரம்!

Today Gold Price in chennai: சென்னையில் 6வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு 42 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் தங்கம் விலை குறைந்து உள்ளதால் நடுத்தர குடும்ப மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Today Gold Price in chennai
மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 2:05 PM IST

சென்னை:இந்திய மக்களின் மனதில் சேமிப்பு என்றாலே, முதலில் தோன்றும் எண்ணம் தங்கம். முக்கியமாக நடுத்தர, பாமர மக்களுக்கு அத்தியாவசிய, எதிர்காலத் தேவைக்கு கைகொடுக்கும் ஒரு முக்கிய முதலீடு மற்றும் உதவும் பொருளாக பார்க்கப்படுவது தங்கம் போன்ற நகை ஆபரணங்கள் மட்டும் தான்.

அப்படிப்பட்ட தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச வங்கிகளின் நிலைப்பாடு, முதலீட்டுளார்களின் முதலீடுகள், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உலகளாவிய சம்பவங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும் தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டை பொருத்து நீர்ணயம் செய்யபட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் விலையில் தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. அந்தவகையில் தங்கம் விலை இன்று (அக்.02) சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது.

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம்:செப்டம்பர் 26 ஆம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்த தங்கம், ஒரு சவரன் ரூ.44,040க்கு விற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலை குறைந்து கொண்டே வந்து, 44 ஆயிரம் ரூபாய்க்கு கீழே சென்றது. மேலும் கடந்த வாரம் அதிரடியாக திடீர் சரிவை சந்தித்த தங்கம், கிராமுக்கு ரூ.70ம், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.43,280க்கு விற்கப்பட்டது.

கடந்த வாரம் மொத்தமும் குறைந்த தங்கம் இந்த வாரம் எப்போது போல எகிருமோ?.. என நகை முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் இருந்தது, ஆனால் வாரச் சந்தை துவங்கிய முதல் நாளில் மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதனால் நகை முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

43 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தங்கம்: தற்போது உலக சந்தையில், அமெரிக்கா நாட்டில் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. மேலும் டாலரின் மதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கத்தின் மீதான தாக்கம் மற்றும் தேவை குறைந்து காணப்படுகிறது. ஆகையால் தங்கத்தின் விலை குறைந்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆகையால் 43 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் தங்கத்தின் விலை குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 02) கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5 ஆயிரத்து 356க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.42 ஆயிரத்து 848க்கு விற்பனையாகிறது. அதேபோல, 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46 ஆயிரத்து 608க்கும், வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.500 குறைந்து, ரூ.75 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரம் - (அக்.02)

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,356
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.42,848
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.5,826
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.46,608
  • 1 கிராம் வெள்ளி - ரூ.75.50
  • 1 கிலோ வெள்ளி - ரூ.75,500

இதையும் படிங்க: Cyclinder Price Hike : காலையிலேயே ஷாக்! சிலிண்டர் விலை இவ்வளவு உயர்வா?

ABOUT THE AUTHOR

...view details