சென்னை: மக்கள் பணத்தை முதலீடு செய்வது என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தங்கம்தான். அதாவது சர்வதேச பொருளாதார சூழலில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் விலை தினசரி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. பொதுவாக, ஆடி மாதம் என்பதால் எந்த ஒரு விஷேச நிகழ்வுகளும் நிகழாது. ஆகையால், தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படும் என்பர். அதேபோல தங்கத்தின் விலையில் பெரிதும் மாற்றம் இல்லை.
கடந்த ஜூலை 22ஆம் தேதி ரூ.120 குறைந்தது. அந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து காணப்பட்டது. பின்னர், ஜூலை 23ஆம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஆகஸ்ட் 1ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து 44 ஆயித்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2ஆம் தேதி அனைவரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு ரூ.160 குறைந்து 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்து 440க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 8ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்து 320க்கு விற்கப்பட்டது. இறக்கத்தின் உச்சத்தில் மீண்டும் 9ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்து 240க்கு விற்பனை செய்யப்பட்டது.
44 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கத்தின் விலை: கடந்த மே மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சமாக ரூ.46 ஆயிரத்திற்கு விற்பனை செய்யபட்டது. அன்று நிலவிய பொருளாதார சூழல், அமெரிக்காவில் தொடர்ச்சியாக திவாலான வங்கிகள் என பல காரணங்களால் உலக முதலீட்டாளர்கள், தங்கத்தின் மேல் முதலீடு செய்யத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து தற்போது தங்கத்தின் விலை இறங்கு முகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆகஸ்ட் 12ஆம் தேதி தங்கம் விலை வீழ்ச்சியை சந்தித்தது. 22 கேரட் தங்கமானது ஒரு கிராமுக்கு ரூ.5 ஆயிரத்து 500 எனவும், ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 14) தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5 ஆயிரத்து 495 எனவும், அதேபோல சவரன் ரூ.43 ஆயிரத்து 960க்கும் விற்கபட்டது.
அதேநேரத்தில், நீண்ட மாதங்களுக்குப் பிறகு தங்கம் விலை 44 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. அதேபோல் நேற்று (ஆகஸ்ட் 15) தங்கத்தின் விலை மிக குறைந்த ரூபாயில்தான் ஏற்றம் கண்டது. அதாவது கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இறக்கம் கண்ட தங்கம் விலை:சென்னையில் இன்று (ஆகஸ்ட் 16) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து 43 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,495க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.76.20க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.76,200-க்கும் விற்பனை ஆகிறது.
5 நாட்களாக 5 ரூபாய்:ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் இன்று வரை தங்கத்தின் விலையில் பெரிதும் மாற்றம் இன்றி விற்பனையாகிறது. அதாவது கடந்த 5 ஐந்து நாட்களாக கிராமுக்கு 5 ரூபாய் வித்தியாசத்தில்தான் தங்கத்தின் விலை மாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், 5 நாட்களாக ஒரு கிராம் தங்கம் 5,500 மற்றும் 5,495 என்ற விலையில்தான் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தங்கத்தில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரமாக இருக்கும்.
இதையும் படிங்க: Chandrayaan-3 : நிலவை நெருங்கிய சந்திரயான்-3.. புரபல்சன் உந்துவிசை, விக்ரம் லேண்டரை பிரிக்க இஸ்ரோ திட்டம்!