தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாளில் ரூ.600 உயர்ந்த தங்கம்! - 1 கிராம் தங்கத்தின் விலை

Today Gold Price: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.45,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Today Gold Price
ஒரே நாளில் கிடுகிடுவென ரூ.600 உயர்ந்த தங்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 2:02 PM IST

சென்னை:தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதாரச் சுழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.

தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாக கடந்த 8 நாட்களாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.42 ஆயிரத்து 280ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி மதியம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தாக்குதல் தொடங்கியதால், மீண்டும் அதிகரித்தது.

ஆகையால் அன்றைய தினமே தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, கடந்த 2 வாரமாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் என்பது இருந்து கொண்டே வருகிறது. ஒரு நாள் தங்கம் விலை குறைந்தால், அடுத்த நாள் குறைந்த விலையை விட அதிகமாக அதிகரிக்கிறது.

அக்.17-ஆம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் அக்.18ஆம் தேதி மீண்டும் தங்கம் விலையானது ரூ.360 அதிகரித்தது. இதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் (அக்.19) தங்கம் சவரனுக்கு ரூ.200 வரை அதிகரித்த நிலையில், இன்று காலை கமாடிட்டி சந்தை தொடங்கிய உடன் ஏற்றத்துடன் தங்கம் விலை அதிகரித்தது. அதவாது, சவரனுக்கு ரூ.600 அதிகரித்தது.

45 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை:உலக வர்த்தக சந்தையில், இந்திய ரூபாய்க்கு நிகராக தங்கம் அவுன்ஸுக்கு ரூ.1039.71 அதிகரித்து, ஒரு அவுன்ஸ் தங்கம் ரூ.164,534.61 விற்பனை ஆகிறது. இதனால், சர்வதேச சந்தையில், தங்கத்தின் முதலீடும் தேவையும் இருப்பதாலும், இந்த விலை ஏற்றம் உள்நாட்டு பொருளாதாரத்தில் எதிரொலிப்பதாலும் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 660க்கும், சவரனுக்கு ரூ.600 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.45 ஆயிரத்து 280க்கும் விற்பனையாகிறது. இதேபோல வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.77.50க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி கிலோ ரூ.77 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரம் (அக்டோபர் 20)

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,660
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.45,280
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,130
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.49,040
  • 1 கிராம் வெள்ளி - ரூ.77.50
  • 1 கிலோ வெள்ளி - ரூ.77,500

இதையும் படிங்க: Hardik Pandya: நியூசிலாந்து ஆட்டத்தில் ஹர்திக் விலகல்? ஷமியா? சூர்யகுமாரா? யாருக்கு வாய்ப்பு?

ABOUT THE AUTHOR

...view details