சென்னை: இஸ்ரேல்-ஹமாஸ் இடைய நடைபெற்று வரும் போரின் எதிரொலியால், சென்னையில் இன்று (அக்.30) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.45 ஆயிரத்து 880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதார சுழ்நிலை, அரசியல், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களை முன் வைத்து, தங்கத்தின் விலையில் தினமும் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது
இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகி உள்ள போரின் காரணத்தினால், தங்கத்தின் முதலீடு அதிகமாகி தங்கத்தின் விலை அதிகரித்தது. இந்நிலையில், சனிக்கிழமை அன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து, சவரன் ரூ.46,160-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று காலை சர்வதேச சந்தை மற்றும் உள்நாட்டு சந்தை தொடங்கிய நிலையில், தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.