சென்னை: இஸ்ரேல் போர் தாக்கத்தால் தங்கம் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறன. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 வரை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில், தங்கத்தின் முதலீடும், தங்கத்தின் தேவையும் அதிகமாக இருக்கும் நிலையில், தங்கத்தின் விலையில் தினமும் மாறுதலுக்கு உரியதாக இருந்து வரும் நிலையில், இன்று(அக்-26) சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலையில், தங்கம் அவுன்ஸூக்க 1985.15 டலாராக இருந்து வருகிறது.
மேலும் 5 டாலர்கள் உயர்ந்து உள்ள நிலையில், இந்த விலை ஏற்றமானது உள்ளநாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில், எதிரொலிக்க, சென்னையில் இன்று 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.45 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,700க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.500 அதிகரித்து ஒரு கிலோ கட்டி வெள்ளி கிலோ ரூ.78,000-என விற்பனை நடைபெற்று வருகிறன.